இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பரிசளிப்பு, இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு
சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், இஸ்லாமிய வழிகாட்டல் சங்கம் என்பவை ஒழுங்குசெய்திருந்த தவணைப் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, தஜ்வீத் வகுப்பை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கல், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தால் மேற்கொள்ளப்படும் சமய நிகள்வுகளின் ஒளி, ஒலி இறுவட்டுகள் வெளியீடு ஆகிய நிகழ்வுகள், சாய்ந்தமருது பழைய தபாலக வீதியிலுள்ள
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் அதன் ஸ்தாபாகத் தலைவர் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.எம்.நியாஸ், பொருளாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜித், மஜ்லிசுஸ் சூராஹ் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம்.ஸாதிக், மஜ்லிசுஸ் சூராஹ் செயலாளர் மௌலவி ஏ.ஏ.ரியாஸ், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மௌலவி ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரிஸ்கான் ஆகியோருடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment